Thursday, July 29, 2010

என்னவனே என் வாழ்வில் நீ எத்தினை நாட்கள்
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .

Wednesday, July 28, 2010

நான் தாமரை இல்ல சேத்தில் மலர
உன் அன்பாலே உருவாகி உன் இதயம்
என்னும் கருவறையில் வளர்ந்து
உன் பேச்சிலே உயிர் வாழும் உன்னவள்
உன் அன்பு ஒன்று போதும் இந்த ஜென்மத்துக்கு
வேறெதுவும் தேவை இல்ல எனக்கு ....
ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னார்
ஆன சீதா ராமன சந்தேகப்படேலா
அது போலவே நானும் நீ என்ன சொன்னாலும்
ஏற்பேன் ............. ஏன் என்றால் என் ராமன்
நீதானே .............. என் உயிரே ......
கண்ணீர செலவழித்து தோத்து போய்
உனக்காக கவிதைகள் எழுதியும் தோத்து
போனேன் ............. ஆன நீ வீசிய வார்த்தைகளால்
என் இதயத்தில் விழுந்த வலி போகவில்லை ..
உயிர் போனால் தான் போகும் என்று நினைக்கிறேன்
உயிர் போன பின் என் சாம்பலிலும் உன் வலி இருக்குமோ
எண்டு யோசிக்கிறேன் ..........................???????

Tuesday, July 27, 2010

அன்பே என்னை நீ எத்தனையோ தடவ வார்த்தைகளால் காயப்படுத்தி இருக்காஆன ஒருநாளும் .........என் கவிதை கூட உன்னை காயப்படுத்த விரும்பேல ......................என்னை போலவே ............அது கூட உன்னை காதலிக்குது பார்த்தியா? நீ மட்டும் ???????
அன்பே என் ஒவ்வொரு அசைவிலும் நீ இருப்பது போல என் கவிதைகளில் மட்டும் அல்ல என் கன்னத்தில் வழியும் கண்ணீரில் கூட நீதான் இருக்கிறாய் ...தெரியுமா ?உனக்கு ??????????
உன்னாலே உயிர் வாழும் நான் உன்னோடு உனக்காக வாழவில்லையே இது தான் விதியா?இல்ல இறைவன் செய்த சதியா?யாரை நான் கேக்க? சொல் கடவுளே ?
இறைவன் மட்டும் எனக்கு நான் மரணிக்கும் நாளை சொல்லட்டும் எங்கே நீ என்று தேடி ஓடி வருவேன் உன் மடியில் உயிர்விட ........
நீ இருந்தும் இல்லாமல் வாழ்கிறேன்நான் ........ நீ என்னை விட்டு தூரம் சென்றதால். பரவாயில்லை உன் நினைவுகள் இங்கே என்னுடனே சுற்றி திரிகின்றன .................அது போதும் எனக்கு .....
என் காதலை புறக்கணித்து விட்டு

நீயே எனக்கு
ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி விட்டு

சென்று விட்டாய் .............................

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

என்னை ஜடம் என்று நினைத்தாயா ?

என் உயிரே உயிரை எடுத்தும் வாழ்கிறேன்

நீ இந்த உலகத்தில் இன்னும் வாழ்வதால்......!!!
உன்னை நேசித்ததால் என்னை
பூ என்று நினைத்தாயோ??????
என் கண்ணில் கண்ணீர் பூ வருவது
தெரியாமலே நீ திருமண வாழ்த்து பூக்களை
தூவி சென்று விட்டாய் ..............................
நீ தூவிய பூக்களே வாழ்க்கை என்று
வாழ்ந்து விடுவேன் அன்பே ..................
உனக்கு பூவாய் இருந்ததால்
இன்று நான் வேதனை என்னும்
தீயில் வாழ்க்கிறேன் சாகும் வரை
இந்த தீ என்னை விட்டு போகாது
அன்பே ..............................
ஒருத்தன் மேல் உயிரையே வைத்து என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் பெண் அவனையே தன் தாயை போல் எண்ணும் பெண்ணுக்கு இந்த உலகம் குடுக்கும் பெயர் பைத்தியம் ................................
அன்பே உன்னை இதயத்தில்
சுமக்கும் போதெல்லாம் என்
கைகளில் சுமக்கும் நேரம்
எப்போ என்று சிந்தித்தேன்
ஆன என் கைபிடிக்க நீ
நினைக்கவில்லை அதனால்
இன்று கண்ணீரிலும் கவிதையிலும்
சுமக்கிறேன் ..................................
நீ எனக்காக குங்குமமிட்டு அதை என்
நெற்றியில் வாங்கி உனக்காக வாழ
ஏங்கியது என் மனசு ஆன நீ பிரிந்து
விட்டாய் இருந்தும் வாழ்கிறேன் ..........
உன் நினைவுகள் இடும் குங்குமத்துடன்
.....................
உன் நெஞ்சிலே தலை வைத்து நிம்மதியாய்
வாழ நினைத்த போது நீ விட்டு போய்விட்டாய்
ஆனாலும் வாழ்கிறேன் நான் நீ எனக்காக பிறந்தவன்
என்று எண்ணியே...... வாழ்வேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜென்ம ஜென்மங்களுக்கும் உன் அன்பான நினைவுகளுடன்
என் தொலை பேசி அலறும்
போதெல்லாம் உன் நினைவுகள்
வந்து நீ என் அருகில் வருகிறாய்
அங்கே உன் தொலை பேசி அலறும்
போது என் நினைவுகளுடன் நானும்
வருகிரேன உன் அருகில் ??????????
சோதனைகள் நிறைந்த என் வாழ்வில்
சொந்தமென நீ வந்தாய் எனக்கும்
ஒருத்தன் இருக்கான் என்று எண்ணிய
வேளை தாய் போல் அன்பை காட்டி விட்டு
விதி செய்த சதியினாலே என் மனதில்
ரணங்களை தந்து விட்டு சென்று விட்டாயே
நானோ இங்கே ஜடமாக ....................
என் வாழ்விலும் சந்தோசம் அன்பு பாசம்
எல்லாமே வந்திச்சு நீ என்னுடன் இருந்த
போது இன்று ஆயிரம் உறவுகள் இருந்தும்
அன்று கிடைத்த அன்பு இல்லையே .........
அதனால் என் இரவு பகலானது தூக்கம்
தொலை தூரம் போனது .........................
i miss u
அன்பே நீ தூரம் இருந்தாலும்
உன் நினைவுகள் என் பக்கத்தில் தான்
இருக்கிறது என் கவிதைகளாக
தெரியுமா ?????? உனக்கு ...........
அன்பே என் நிழலை கூட
எனக்கு பிடிக்கிறது ஏன்
தெரியுமா? அது கூட உன்
நினைவிலேயே அலைகிறது ....
தனிமையில் உன்னைப் பற்றி
நினைக்கும்போதல்லாம் என் கண்ணில் வரும் கண்ணீர் துளிகளே உன் மேலுள்ள என் அன்புக்கு
சாட்சியம் என் தாயானவனே.......!!!
கை பேசியில் நம் நினைவுகள்
உலவுவதலோ என்னவோ உனக்குள்
என்னும் என் நினைவு இருப்பதாய்
எண்ணி என் நினைவுகள் என் கை பேசி
அலறும் போதெல்லாம் மகிழ்கின்றன .........
உன்னுடன் உரையாடியதை விட உன் நினைவுகளுடன் உரையாடிய நேரம் தான் அதிகம் ......... உன் போல் அல்ல உன் நினைவுகள் அது இடையில போக மாட்டுதாம் உன்ன விட அதிகமா உன் நினைவுகளை நேசிக்கிறேன் ....... என்னுடனே இருப்பதால் ...........
உன்னாலே என் தூக்கம் பறிபோனது தினமும் விழித்து இருக்கிறேன் .....அங்கே உன் கனவில் வருகிறேனா????இல்லை என் போலவே உன் தூக்கமும்பறி போய் விட்டதா ?????
உயிரான என்னவனே உன்னாலே மறுபடி பிறந்தவள் நானே நீ என்னைவிட்டு போனதால் மறுபடியும் இறந்து விட்டேன் .................இப்போது இங்கே நடைப்பிணமாக ..........வாழ்கிறேன் ................
எனக்கு ஒரு உயிர் தானோ என்றிந்த நேரத்தில்... எத்தனையோ உயிர்களை எனக்காக தந்தாய்.எதுக்காக ?உன்னை தவிர வேறு யாரும்எனக்கு பிடிக்காது என்று தெரியாதா?
புயலாய் இருந்த என் வாழ்வில் தென்றலென நீ வந்தாய் வந்த நீ வராமலே போய் இருக்கலாம் அன்றே இறந்திருப்பன் ...........நீ பிரிவு என்னும் வலிய தந்து போனதால் பிணமாக வாழ்கிறேன் எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை ?
ன் வாழ்விலும் தூக்கத்தில் இனிமையான கனவு அதில் உன்னோடு நான் மட்டுமே இருந்தேன் ........ஆன என்னை விட்டு பிரிந்ததுக்கு என்ன காரணம்என்று சொல்லாமலே பிரிந்து சென்றதால் நீ பிரியும் போது என் தூக்கத்தையும் பறித்து சென்று விட்டாய்இப்போ கனவுகள்; போய் நினைவுகள் என்னோடு இருக்கிறது ............... நீ மட்டும் ?????????
பழையனவற்றை உன்னோடு பகிரனும் என்று நினைக்கும் போதெல்லாம் புதியவை தடுக்கிறது ஆனாலும் உன்னை நேசித்த இந்த இதயத்துக்கு உன் நினைவுகளை தூக்கி எறிய தெரியாததால் ....................மறு ஜென்மத்தில் உன்னோடு இருப்பேன் என்று தனக்கு தானே போலியான ஆறுதல் சொல்கிறது ..........
நீ என்னை விட்டு சென்று இன்னொரு வாழ்க்கை நான் வாழனும் என்று வாழ்த்திய நேரம் கத்தி கொண்டு என் இதயத்தை கிழித்திருக்கலாம்.......
காதல் சுகமானது காதல் இதமானது
இணைந்திருந்தால்
காதல் சுமையானது பிரிந்திருந்தால்
தாலாட்டுமே பிரிவில் நினைவுகள்
இறுதி வரை .....................
உன் sms எல்லாம் inbox இல் அழிந்து விட்டது உன் received calls கூட அழிஞ்சிட்டு ஆன உன் நினைவுகள் மட்டும் அழியவில்லை என் இதயத்தில் இருந்து அழியாது என் உடல் மண்ணோடு போனாலும் ..........................
அன்பின் முகவரி கண்டுகொள்கிறேன் தாயின் முகவரியில்....என்றார்கள் பலர் ஆன நானோ அன்பின் முகவரியை உன்னில் தானே பாக்கிறேன் என்னவனே ...........
அன்பே நீ வீசி எறிந்த வார்த்தைகளால் என் இதயம் சிதறி அதில் உள்ள உன் நினைவுகள் இரத்தமாய் போவது தெரியுமா உனக்கு ..........

Wednesday, July 14, 2010

என்னவனே என் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளை மட்டும் அல்ல
உனக்கான என் கவிதைகளையும்
சுமப்பேனட என் தெரியுமா ?அவற்றில்
நம் காதல் உயிர் வாழுதடா
உன் குரலை முதல் முதல் கேட்டபோது என் உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது ..........அன்று நினைத்தேன் எனக்காக பிறந்தவன் நீ உன்னோடு வாழனும் என் வாழ்வை என்று....... ஆன நீயோ மனதால் வாழ்ந்து விட்டு நிஜத்தில்வாழ்த்தி அல்லவா சென்று விட்டாய்...........
இரு உள்ளங்கள் உள்ளிருந்து அழுவது இறைவனுக்கு தெரியவில்லை ........எனி தெரிந்தும் பிரயோசனம் இல்லை ....துன்பம் வந்தால் இன்பம் வரும் எண்டார்கள்.......பிரிவு வந்தால் இணைவு வருமா ...........?வந்தால் அது மரணத்திலா..............?
உள்ளத்தால் இணைந்து ஊரோடு சேர்ந்து நீயும் என்னை வாழ்த்தி விட்டு என் மனம் கலங்குவது புரியாமலே ......... தூரம் சென்று விட்டாய் நீ ....... என் மனம் என்ன உயிரில்லா பிணமா............................?
ஒரு முறை நீ நானாகவும் ...........
நான் நீயாகவும் வாழனும் .........
அப்போதான் என் வலி உனக்கு .............
தெரியும் .................... நீ இன்றி நான்
வாழும் என் வாழ்வின் உயிர் போகும்
...வேதனை ...........
உன்னை சுமக்கும் இந்த இதயத்துக்கு
உன் பிரிவின் வேதனை உயிர் கொல்லி
மருந்தாகுது ........... ஆனாலும் நீ
நான் வாழனும் என்று சொன்னதால்
நடைப்பிணமாக என்னும் வாழ்கிறது
...என் இதயம் .....................................
அடையாளம் தெரியாத உன்னை
உன் குரலில் மயங்கி விரும்பினேன்
நீதான் என் வாழ்க்கை என்றிருந்தேன்
நீயோ விலகி சென்று வலியை வாழ்க்கை
ஆக்கி விட்டாயே?
உசிர் பிரிந்தாலும் என் கல்லறை
கூட உன்னக்காக கவி பாடும்
நான் உன் மேல் கொண்ட
அன்பை பார்த்து .....................
என் உறக்கம் பறி போனதால்
என் கண்கள் என் இதயத்தை
பார்த்து கேக்கிறது ........ நானே
பார்க்கவில்லை நீ உனக்குள்
அவனுக்கு இடம் கொடுத்து விட்டு
...ஏன் எனக்கு வலியை கொடுக்கிறாய் ?
என்று ............................
எனக்கு நிறை வேறாத ஆசைகள்
நிறைய உண்டு ..................அப்படி
இருந்தும் இன்னும் ஒரு ஆசை
உண்டு நான் கல்லறைக்கு சென்றாலும்
கல்லறையில் துவாரம் வைத்து உன்னை
...பாக்க வேண்டும் ......... மரணத்தின் பின்பும் .....
என் கவிதைகள் கேக்கின்றன
அவனை நேசித்ததால் என்னை
எழுதுகிறாயே?அவன் உன் வாழ்வில்
வரவில்லை என்றால் நான் உனக்கு
அறிமுகமாகி இருப்பேனா ?என்று
ஒரு முறை வாழ்க்கை, அதில் ஒவ்வொரு நொடியும் அவன் நினைவுகள் ............. அதில் கழிகிறது என் வாழ்க்கை ..........
என்னை இடையிலேயே விட்டு
சென்றுவிட்டாய் அதனால் தூக்கம்
இன்றி விளிதிருக்கேன் ..........
அங்கே உன் கனவில் வருகிறேனா?
என்னை மறுபடியும் உன் இதயம் என்னும் கருவறையில் உருவாக்கி உயிர் கொடுத்த இரண்டாம் தாய்நீ என் உயிரே ...............
வானத்தில் இருக்கும் மேகம் போல் எத்தனை உறவுகள் என் வாழ்வில் வந்து போனாலும் இதயத்தில் உறவாடிய உன் உறவு நான் கல்லறைக்கு செல்லும் வரை நினைவுகளாய் என்னுள் வாழ்வை நீ......................................
நீ என்னுடன் அன்பாய் பேசுவதை விட கோபப்பட்டு பேசுவதே எனக்கு நீ என்மேல் வச்சிருக்கும் அன்பின் ஆழம் தெரிகிறது .........
உன் கையால் தாலி வாங்கி
உனக்காக குங்குமம் இட்டு
உன் நெஞ்சில் தலை சாய்த்து
உன் மடியில் உறங்கி
உன் காலடியில் உயிர்
...விடனும் என்று காத்திருந்த
போது நீ பிரிந்து விடு என்று
சொல்லி சென்று விட்டாய்
என் உயிர் வலிப்பது புரியாமலே ...........
உன் கையால் தாலி வாங்கி
உனக்காக குங்குமம் இட்டு
உன் நெஞ்சில் தலை சாய்த்து
உன் மடியில் உறங்கி
உன் காலடியில் உயிர்
...விடனும் என்று காத்திருந்த
போது நீ பிரிந்து விடு என்று
சொல்லி சென்று விட்டாய்
என் உயிர் வலிப்பது புரியாமலே ...........
அன்பே உன் பாசத்தை
பார்த்து என்னையே மறந்தேன்
சோகம் எல்லாம் சுகமானது ..
அன்று நினைத்தேன் நான் எப்போதும்
உன் கைக்குள்ளேயே இருக்கணும்
...என்று ஆன நீயோ சலனமே இல்லாமல்
என்னை விட்டு சென்று விட்டாய்...........
உனக்குள் நானும் எனக்குள் நீயுமா
வாழ்கிறோம்.......... எப்போது உன்
தோள்களில் தலை சாய்த்து உன்னால்
அரவணைக்கப்பட்டு வாழ்வது மறு
ஜென்மத்திலா? அப்போதும் இல்லை
...என்றால் வேண்டாம் எனக்கு மறு
ஜென்மம் ......................
சாலை ஓரம் உன்னுடன்
நடந்து செல்ல ஆசைதான்
நிஜத்தில் முடியாது அதனால்
கனவிலும் கற்பனையிலும்
செல்கிறேன் உன்னுடன்
...எப்படி முடியும் நிஜத்தில்
நீதான் தூரம் சென்று விட்டாயே?
பகலென்ன இரவென்ன என் நெஞ்சம் உன்னைத்தான் தேடும் விழி மூடும் அந்நேரமும் அங்கு உன் பிம்பம் தோன்றும் நட்டநடு ராத்திரியும் பட்டபகல் போலே சுட்டெரிக்கும் அதிசயம் கண்டேன் நீ என்னை சேராமல் விலகியதால் !!!!!!!!!!!!
நீ வரும் கனவுக்காக தினமும் காத்திருக்கிறேன் விழித்திருக்கும் வேளையிலும்.... துணையாக நினைக்கிறன் உன்னை உன் நேசம் மெய்யானால் என் உயிர் இந்த உலகை விட்டு பிரியும் ஒரு முறை நீ வந்து விடு அது போதும் எனக்கு ...............
நான் உன் பிரிவினால் எப்பிடிவருந்துகிறேன் என்று தெரியனுமா?வந்து என் தலையணைய கேட்டு பார்என் கண்ணீரின் வேதனை சொல்லும் அது உனக்கு ...................
அன்பே இன்று உன்னை இழந்து
நான் இங்கே நடை பிணமாக
வாழ்கிறேன் ............... நீ என்ன
சொன்னாலும் கேட்பேன் என்பதற்க்காக
உன்னை விட்டு விலக சொல்லி சென்று
...விட்டாயே.....................................
அதனால் தான் ...................................
I MISS YOU
அன்பே உனக்குள் நானும்
எனக்குள் நீயும் இருந்ததனால்
இன்று நம் நினைவுகள் சாலை
ஓரம் அன்பை பகிர்கிறது.............
நினைவுகள் ஆவது வாழட்டும்
...சந்தோசமாய் ............................
நீ அருகில் இருந்த போது
பூக்களுக்கு நடுவே உறங்கினேன்...
இன்று நீ இல்லாததால் முட்களுக்கு
நடுவே உறங்குகிறேன்.............
இந்த தூக்கம் தொடரும்
...மறு ஜென்மம் வரை...........
நீ என்னுடன் சேர்வது
மறு ஜென்மத்தில் தானே ........
நீ எதை சொன்னாலும் கேட்பேன்
என்று உனக்கு தெரியும் தானே
அன்று அன்பாய் சொன்னாய்
கேட்டேன் அதுக்காக என்னை
மறக்க சொல்லி சென்று விட்டாயே
...ஏன் என் மனம் துடித்தது தெரியலயா?
உனக்கு ............................
வாழ்கை பயணத்தில் நான் இளைப்பற
எனக்காக கொஞ்ச நாள் கடவுள்
அனுப்பிய ஒருத்தன் தான் நீ
உன் வேல முடிஞ்சு நீ போய்ட்ட
வாழ்கை முழுதும் அழுவது
...நான் கடவுளுக்கென்ன ......
இப்போ உன் நினைவு என்
அருகில் இருந்து என்னை
பாக்கிறது .................
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம்
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம்
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
முதல் நாளில் நீ பேசிய முதல் வார்த்தை இரண்டாம் நாளில்
உன்னை என் இதயம் தேடியதை
இறுதியாய் என்னை விட்டு
போய் விடு என்றதை எதையும் மறவேன்
அன்பே மறக்கவும் முடியாது
உன்னையே உறவாய் எண்ணி
வாழ்ந்தவளை சமுதாயத்துக்காக
சுயநலவாதியாக என்னை தூக்கி
எறிந்து விட்டு சென்றுவிட்டாயே
என்னை பத்தி ஒரு முறை ஜோசித்தாய ?